கர்த்தாவே உமக்கு நிகரானவர் யார்?

 

               

                கர்த்தாவே உமக்கு நிகரானவர் யார்? யார்? யார்?

                No one, No one, My Lord

                மனுபுத்திரரில் உமக்கு ஒப்பானவர் யார்? யார்? யார்?

                No one, No one, My Lord

                உம்மைபோல் எவருக்கும்; வல்லமை இல்லையே

                ஒருவருக்கும் இல்லையே வல்லமை இல்லையே

               

 

செங்கடல் உம்மாலே வற்றிப் போனதே

வெட்டாந்தரையில் உம்ஜனத்தை நடக்கச்செய்தீரே

பார்வோனின் சேனைகளை சமுத்திரம் விழுங்கினதே

எந்தனின் எதிரிகளை உந்தன் கரம் வீழ்த்திடுமே வீழ்த்திடுமே

                                                                                                                - கர்த்தாவே

 

தேவனைபோல் கன்மலை வேறு இல்லையே

கர்த்தiரைபோல் பரிசுத்தர் எவரும் இல்லையே

மேட்டிமை பேசவேண்டாம் அகந்தையான பேச்சுவேண்டாம்

கர்த்தரே உயர்த்துகிறார் அவரே தான் தாழ்த்துகிறார் தாழ்த்துகிறார்

                                                                                                                - கர்த்தாவே

 

ராஜாக்கள் பிரபுக்களே செவி கொடுங்களேன்

இஸ்ரவேலின் தேவனை நானும் பாடுவேன்

தேவனுக்கே பயப்படுங்கள் ஜெயம்கொடுக்கும் கர்த்தரவர்

யுத்தத்தில் வல்லவரே முன்னின்று நடத்திடுவார் நடத்திடுவார்

                                                                                                                - கர்த்தாவே